Wednesday, May 19, 2010

அகதி என்றால் அது வேறு யாருமில்லை அது தமிழன் தான்

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

கத்தி கத்தி
ஓய்ந்து போய்
அந்த கொடூரத்தை
காண சகிக்காமல்

கொத்தாய்
விழுந்த குண்டுகள்
ரத்தம் குடித்த
தொலைக்காட்சி பதிவுகளை

பள்ளிகுழந்தைகள்
பதுங்குகுழிக்குள்
புத்தகபையோடு
உயிரிழந்து கிடந்த
செய்தி தாள்களை

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

சொந்த மண்ணில்
சோற்றுக்கு அலைந்து
வழிதெரியாத காட்டில்
வாழ்க்கையை தொலைத்தபோது

கண்ணெதிரே சொந்தங்கள்
கற்பிழந்து
தெருமுற்றத்தில்
காகிதமாய் கழிந்தபோது

வெட்டவெளி சிறைசாலையில்
சொந்த நாட்டில்
அகதியெனும் சொல்
பிறந்த பொழுது

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

No comments:

Post a Comment