Saturday, May 22, 2010

தீராத பொழுதுகள் ...

என்
உலகம்
மைதான தேசத்தில்
மயங்கி கிடந்த பொழுது
கவிதை புத்தகத்தை
கையில் கொடுத்தவளே ....

திருவிழாக்களை
புறந்தள்ளிவிட்டு
திரைப்படத்தில்
தூங்கிகிடந்தவனை
ஒற்றை புன்னகையில்
எழுப்பி விட்டவளே .....

நீ
எங்கே
இருக்கிறாய்


வருடங்கள்
ஆறான பின்பும்
அப்படியே
கிடக்கிறது
உனக்காய்
எழுதிய கவிதைகளும்
வாங்கிய பொழுதுகளும் ....

நீயும்
நானும்
ஒரே பள்ளியில் படித்தோம்
கவிதை போட்டியில்
உன்
பெயர் எழுதி
நான்
மாட்டிகொள்ளுகிற வரை ....

அதற்க்கு பின்பு
பள்ளிகள்
இடம் மாறி போனது
இல்லை
வாழ்க்கையும் தான்....


ஒரே
ஊரில் இருந்தாலும்
உன்னை பார்பதென்பது
எட்டு திங்களுக்கு
ஒரு முறை தான்....


எப்பொழுதாவது
உன்னை
பார்த்தாலும்
கண்டும் காணாமலும்
போக சொன்னது
உன் மவுனம் ....

தொடர்ச்சியான
இடைவெளிகள்
தூரத்தை
நிர்ணயம்
செய்துவிட்டதால்
கவிதைக்கான
கற்பனைகள்
வாடி கிடக்கிறது .....

இதற்கு
நான்
காரணம் அல்ல
அவள் தான்..............

No comments:

Post a Comment