Thursday, October 22, 2009

இந்த ஈரம் எப்போது காயும்

ஈழம்
ஈரமாகவே
இருக்கிறது
இங்கு
யார் நெஞ்சிலும்
ஈரம் இல்லாததால்...

இந்த ஈரம்
கண்ணீரும்
ரத்தமும்
கலந்த ஈரம்....

ஒரு காலத்தில்
அங்கு
ராஜாவை
வலம் வந்தோம் ...
இன்று
மூல்வேலிக்கு உள்ளே
முகவரி இன்றீ கிடக்கிறோம் ........

Thursday, October 15, 2009

என் தமிழும் என் கவிதையும்

அவசரமாய் போன ஒரு யுகத்தில் நானும் அவசரத்தில் எழுதுகின்ற இந்த கவிதையை நீங்கள் பொறுமையாய் படிக்கிற பொழுதுதான் என்னுடைய கவிதை கவிதையாகிறது ....................

தான் எழுதிய கவிதைகளை
நினைவில் வைத்து கொள்கிறவன்
கவிஞன்...
மறந்து விடுகிறவன்
மகா கவிஞன்..
நான் மகா கவிஞன்......

என்னுடைய இந்த வலைதளம் என்னுடைய சமூகத்தை நான் பார்த்த மட்டில் எனக்கான புரிதலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரு வாய்பாக எண்ணி என் படைப்புகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..கடந்த ஆறு ஆண்டுகளை நான் ரசித்த கவிதைகளையும் நான் ரசித்து எழுதிய கவிதைகளையும் எழுத உள்ளேன். கரிசல் மேடு மழையை கண்டால் குளித்து கொண்டே தலை துவட்டி கொள்ளுமே ..அது போல் நானும் நீங்கள் எனை வாசிக்க வாசிக்க வளம் பெறுவேன்...

அன்புடன்
அசோக்...