Monday, November 29, 2010

ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் கவிதைகள்

கவியெழுத  ஆரம்பித்த
காலம் தொட்டு
காத்திருந்து எழுதியதில்லை
கவிதை பாட்டு......

காலமெல்லாம் நிற்கும்படி
சீர்களைப் போட்டு
கவியெழுதப் போகின்றேன்
உங்கள் கால்கள் தொட்டு ......

வாக்கொன்று கொடுத்ததனால்
வார்த்தையிங்கு தொடுக்கவில்லை
வாழ்த்தொன்று வாங்குவதற்கு
வாய்ப்பன்று கொடுக்கவில்லை .....

ஆசைக்கு நாள்குறிச்சு
அன்னைக்கு சேர்ந்தகத
மீசை நரைச்ச பின்னும்
மிச்சகத பேசுதுங்க ........

இருபதிலே மணமுடிக்க வாய்ப்பு
இல்லை பலருக்கு
அறுபதிலே மணமுடிக்க நூறில்
ஆறுபேருக்கு வாய்க்குமோ?

பெத்தபுள்ள  தூக்கி
பேருவச்ச காலம்போயி
பேரப்புள்ள தூக்கி
பேருகேட்கும் நாள் வந்ததே!

ஓடி உழைச்சதில
உடம்பு தேஞ்சிருந்தாலும்
உறவுகள பாத்தவுடன்
உசிரு துடிக்கிறதே .....

இத்தன வருசத்தில்
எத்தன ரகசியங்கள்
கண்ணால பேசிகிட்டு
கரைஞ்சு  போயிருக்கும் ...

நாளெல்லாம் சொன்னாலும்
நாள் குறிச்சு  சொன்னாலும்
நலுங்கு வச்ச நாள
மறக்க மனசுல இடமேது .....

இருமனமே இருமணம் தானென்று
இருந்துவிடப் போகின்றீர்
மூன்றுமகன் இருப்பதனால்
முப்பெரும் விழா இருக்கின்றது .....








 

Wednesday, October 27, 2010

காதல் தீபாவளி

ஒரு
பூக்கடை
வெடிகடைக்கு போகிறது.
நீ
வெடி வாங்கப்போனதை
நான்
வேறுஎப்படி சொல்லமுடியும் ...

நெருப்பையும்
சிரிப்பையும்
வைத்துக்கொண்டு
நீ
கொளுத்திப்போட்ட பட்டாசுகளில்
முதலில் வெடித்தது நான்தான்..............

தீபாவளி
வந்துவிட்டது
வழக்கம்போல்
நீ
எச்சில் செய்த
பலகாரத்தை மட்டும்
எனக்கனுப்பு
அதுபோதும் எனக்கு ..............

பண்டிகை அன்று
நீ
கோவிலுக்கு போனால்
பாவம் கடவுள்
எல்லா வகையிலும்
நிராகரிக்கப்படுகிறார்..


கடைசியில்
கம்பிமத்தாப்பு
புஷ்வானம் கொளுத்தி
பூரித்து சிரிக்கையில்
என்
அடுத்த வருடத்திற்கான
தீபாவளி கனவுகள்
அங்கேயே தொடங்குகின்றன ................

Wednesday, September 1, 2010

தீராத பொழுதுகள்

கனவில்
உன்னோடு பேசுவதை
நினைத்து நினைத்தே
கழிகிறது
பகல் பொழுது ..........

வாடாத பூக்கள் ...

உனக்காய் எழுதிய
முதல் கவிதை
எந்த திருத்தமுமின்றி
அப்படியே இருக்கிறது
உன்னை போல அழகாய்...............

எது கவிதை

ஒன்றுக்கு
இரண்டுமுறை
இரண்டுக்கு
மூன்றுமுறை
மூன்றுக்கு
நான்குமுறை படித்தும்
நகம்கடிக்க செய்தால்
அதுதான் கவிதை .....

இந்த
நகக்கடி கவிதைகள்
கொசுகடியை காட்டிலும்
அதிகம் கடிக்கிறது ......

அறிவுஜீவிகளே
உங்களை
அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

எங்கள்
பாமர கூட்டத்திற்கு
தெளிவுரை தேவைப்படுகிறது

உங்கள் தெளிவுரைக்கு
மீண்டும் ஒரு விளக்கவுரை
தேவைபடாதென்று நம்புகின்றேன் ....

Monday, June 14, 2010

இது புரியாத கவிதை அல்ல...புது கவிதை

அழகன்
பெற்றெடுத்த
ஒரு
அழகி ....

இல்லை
இல்லை

அழகி
பெற்றெடுத்த
ஒரு
பேரழகி ...

இங்கு
ஒரு
கேள்வி எழலாம்?

அழகியா
இல்லை
பேரழகியா ....

இளவழகன்
தூக்கி
கொஞ்சுகிறபோது
அழகி ...

இளவழகன் மனைவி
தூக்கி
கொஞ்சுகிறபோது
பேரழகி ...

ஒவ்வொரு
குழந்தையும்
ஒரு புத்தகம்
வரிக்கு வரி
வாசியுங்கள் ......

ஒவ்வொரு
குழந்தையும்
ஒரு வானம்
உங்கள்
சிறகுகளை
தேடி கண்டுபிடியுங்கள் .......

குழந்தையோடு
விளையாடுகிறபோது மட்டும்
யாருக்கும்
வியர்ப்பதில்லை
முடிந்தளவு விளையாடுங்கள் .....



உங்கள்
குழந்தை நிலவு
ரசித்து போன
நட்சத்திரங்களில்
நானும் ஒருவன் ....

ஒரு
குழந்தைக்கான கவிதை
வார்த்தைகளையும் தாண்டி
ஏதோ
ஒன்றில் தொடங்கி
ஏதோ
ஒன்றில் முடிகிறது ...

அது
எதுவாய்
வேண்டுமானாலும்
இருக்கலாம் ...

தெரிந்தால்
சொல்லுங்கள்
தெரியாமல் இருந்தால்
உங்கள் குழந்தை
உங்களுக்கு
சொல்லிக்கொடுக்கும் ...........

அன்புடன்
அசோக் .......

Sunday, June 13, 2010

காதல் கவியரங்கம்

எனக்கு
அன்னம் இட்டது
திரை அரங்கம்
ஆளாக்கி விட்டது
கவி அரங்கம்

எதை
பாடசொன்னாலும்
காதல் பாடுகிறவனை
காதலை
பாட சொன்னால் ?

எல்லோரும்
காதலிக்கிறார்கள்
ஆனால்
ஒரு சிலர் தான்
கவிதை எழுதுகிறார்கள்

முதல்
காதலும்
முதல்
கவிதையும்
ஒருவன்
தனக்கு தானே
எழுதிக்கொள்ளுகின்ற
கடிதங்கள்

நிறையபேர்
வாழ்கையில்
கடிதங்கள்
பிரிக்கபடாமலே
கிழிக்கப்படுகின்றன ............

காதல்
இசை
காது உள்ளவர்கள்
கேட்டு மகிழ்கிறார்கள் ....

காதல்
மொழி
வாய் இருப்பவர்கள்
பேசி சிரிக்கிறார்கள் ......

காதல்
இரவு
உன்னை எழுப்பிவிட்டு
அது
தூங்கி போய்விடும் ......

காதல்
நிலவு
கவிதைகளை
கடன் வாங்கும் .....

கல்லறை அதிசயமாய்
இருப்பதனால் தான்
என்னவோ
இங்கே தான்
காதலுக்கு அதிக
கல்லறைகள்
கட்டப்படுகின்றன ....

Saturday, June 5, 2010

***************

கொள்ளை
அடித்ததென்னவோ
அவள் தான்
ஆனால்
எல்லோரும்
என்னையே
விசாரிக்கிறார்கள் .........

பாட்டு

கவியெழுத நான் நினைத்தேன்
கண்ணே உன் பெயரெழுதி
கவிமுடித்தேன் அன்றே நான்
கவிஞன் ஆனேன் - என்
புவிமுழுக்க புகுந்த உன்எண்ணம்
புலன்அள்ளி தின்னுதடி பூவே
தவிக்கஎன்னை விட்டு விட்டு நீ
தள்ளியிருக்க காரணமென்ன

*************************

நிறைய
காதல்கள்
பேருந்தில்
ஆரம்பிக்கின்றன
ஆனால்
இறுதியில்
விபத்தில் முடிகின்றன ...
நிலவொளியில் மின்னுகிற
தூரத்து ஆற்றில்
இரவு குளிக்கபோனபோது
மின்னலாய் வந்த
உன் எண்ணங்கள்
என்னையும்
என் கவிதையையும்
எழுப்பி விட்டதடி .....

*****************************

மீண்டும்
பள்ளிக்கு
போகவேண்டும்
போலிருக்கிறது
இந்த முறை
நன் உன்னை
சுதந்திரமாய் காதலிக்கவேண்டும் ...........
காதலுக்கு
திருவிழா எடுத்தால்
நீயும் நானும்
தெய்வமவோம்
நம் கவிதைகள்
நமக்காய்
பல்லக்கு தூக்கி ஊர்வலம் போகும் ...
மரகிளையில்
கூடு கட்டுகிற
பறவைகள் கணக்காய்
மனகிளையில்
கூடுகட்ட விரும்பினேன் என எழுதி
அடுத்த வரி கவிதைக்காய்
அமர்ந்திருக்கிற பொழுது
நீ போட்ட கோலத்தில்
நானும் ஒரு புள்ளியானேன் .........

************************************

என்மேல்
ஒரு குற்றசாட்டு
எந்த
தலைப்பு கொடுத்தாலும்
உன்னை பற்றியே
எழுதுகிறேனாம் ....

அட
இது
என்ன
அநியாயம்

கவிதை போட்டியில்
கவிதை தானே
எழுத வேண்டும் .....

***************************************

வெள்ளிகிழமைதோறும்
கடவுள்
உனக்காய்
காத்து இருக்கிறார்
தினந்தோறும்
நான் சொன்னதை
உனக்கு திருப்பிசொல்ல

Saturday, May 22, 2010

தீராத பொழுதுகள் ...

என்
உலகம்
மைதான தேசத்தில்
மயங்கி கிடந்த பொழுது
கவிதை புத்தகத்தை
கையில் கொடுத்தவளே ....

திருவிழாக்களை
புறந்தள்ளிவிட்டு
திரைப்படத்தில்
தூங்கிகிடந்தவனை
ஒற்றை புன்னகையில்
எழுப்பி விட்டவளே .....

நீ
எங்கே
இருக்கிறாய்


வருடங்கள்
ஆறான பின்பும்
அப்படியே
கிடக்கிறது
உனக்காய்
எழுதிய கவிதைகளும்
வாங்கிய பொழுதுகளும் ....

நீயும்
நானும்
ஒரே பள்ளியில் படித்தோம்
கவிதை போட்டியில்
உன்
பெயர் எழுதி
நான்
மாட்டிகொள்ளுகிற வரை ....

அதற்க்கு பின்பு
பள்ளிகள்
இடம் மாறி போனது
இல்லை
வாழ்க்கையும் தான்....


ஒரே
ஊரில் இருந்தாலும்
உன்னை பார்பதென்பது
எட்டு திங்களுக்கு
ஒரு முறை தான்....


எப்பொழுதாவது
உன்னை
பார்த்தாலும்
கண்டும் காணாமலும்
போக சொன்னது
உன் மவுனம் ....

தொடர்ச்சியான
இடைவெளிகள்
தூரத்தை
நிர்ணயம்
செய்துவிட்டதால்
கவிதைக்கான
கற்பனைகள்
வாடி கிடக்கிறது .....

இதற்கு
நான்
காரணம் அல்ல
அவள் தான்..............

Wednesday, May 19, 2010

அகதி என்றால் அது வேறு யாருமில்லை அது தமிழன் தான்

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

கத்தி கத்தி
ஓய்ந்து போய்
அந்த கொடூரத்தை
காண சகிக்காமல்

கொத்தாய்
விழுந்த குண்டுகள்
ரத்தம் குடித்த
தொலைக்காட்சி பதிவுகளை

பள்ளிகுழந்தைகள்
பதுங்குகுழிக்குள்
புத்தகபையோடு
உயிரிழந்து கிடந்த
செய்தி தாள்களை

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

சொந்த மண்ணில்
சோற்றுக்கு அலைந்து
வழிதெரியாத காட்டில்
வாழ்க்கையை தொலைத்தபோது

கண்ணெதிரே சொந்தங்கள்
கற்பிழந்து
தெருமுற்றத்தில்
காகிதமாய் கழிந்தபோது

வெட்டவெளி சிறைசாலையில்
சொந்த நாட்டில்
அகதியெனும் சொல்
பிறந்த பொழுது

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

Thursday, May 6, 2010

கவிதை போட்டியில் ஒரு கவிதை புத்தகம் ...............

நீ
எங்கே இருக்கிறாய்
என்
கவிதைகளின் பயணம்
வார்த்தைகளின்
பற்றாகுறையால்
பாதியிலே நிற்கிறது ...........


எந்த பேருந்தில்
ஏறினாலும்
உனக்கும்
ஒரு டிக்கெட்
சேர்த்தே எடுக்கிறேன் .....

மழையில்
நீ குடைபிடித்து
நடக்கிற அழகை பார்த்தால்
கவிதை
தன்னை தானே எழுதி கொள்ளும் .........

உன்
தெருவின் நீளத்தில்
என் காதல்
தன்
தேசத்தை தேர்ந்தெடுத்து கொண்டது .........


ஊருக்குள்
தெரு
ஆனால்
நீ
தெருவில் நடந்தால்
தெருவுக்குள் ஊர் ...............


ஓர கண்ணால்
நீ
பார்க்கிற அழகை பார்க்க
நிச்சயம்
இரண்டு கண் போதாது ............


நீ
எந்த போட்டியில்
கலந்து கொண்டாலும்
என்னை பொறுத்தவரை
அது கவிதை போட்டி தான்........

Wednesday, May 5, 2010

நினைவில் தொலையாத ஒரு கனவு

இரவல்
வாங்கிய
எந்த கவிதை
புத்தகத்திலும்
உன்னை போல் ஒரு கவிதை இல்லை...

Friday, April 30, 2010

முத்தங்களை கன்னங்களே தீர்மானிகின்றன

நீ
கொடுத்த
முத்தத்தின் ஈரம்
காய்வதற்குள்
இன்னுமொரு முத்தம் கொடு ....

உன்
முத்தங்களின் வாசம்
கன்னத்தில்
ஆரம்பித்து
கவிதையில்
முடிகிறது...............

உன்
முத்தத்தின் நீளத்தில்
உதடுகள்
தொலைந்து
போகின்றன ...........

நீ
ஆயிரம் முத்தம்
கொடுத்திருக்கலாம்
ஆனால் அந்த
முதல் முத்தத்தின் வாசம்
இன்னும்
உயிரோடு இருக்கிறது
உதடோரம் ............


முத்தங்கள்
பரிசுகள்
தயவு செய்து
யாரிடமும்
கேட்டு வாங்காதீர்கள் ...........

முத்தங்கள்
ரகசியங்கள்
உதட்டோடு
உதடு
பரிமாறி கொள்ளுங்கள் ........

கண்ணை
மூடிக்கொண்டு
படிக்ககூடிய
ஒரே கவிதை
முத்தம் ........






Tuesday, April 6, 2010

அழகான யோசனை .............

ரோஜாவிற்கு
பெயர் மாற்றம் செய்தால்
உன் பெயர் வைக்கலாம் ..........

நீ வந்த பிறகு ..........

நீ வந்த பிறகு
என்
வானம்
இன்னும் அழகானது
உன் லிப்ஸ்டிக் பூசி கொண்டு ......

நீ வந்த பிறகு
எல்லாம்
தலைகீழ் ஆனது
நானும் கவிதை எழுதுகிறேன் ........

நீ வந்த பிறகு
கொஞ்சமாய் பேசுகிறேன்
ஆனால்
நிறைய சிரிக்க வேண்டி இருக்கிறது .......

நீ வந்த பிறகு
எதிர்த்தே பேசுவதில்லை
ஏனோ யார் பேசுவதும்
என் காதில் விழவேயில்லை ........

நீ வந்த பிறகு
எதையுமே மறப்பதில்லை
உன்னை தவிர
வேறு எதையும்
நினைத்தால் தானே மறப்பதற்கு ........

எங்கே எனது புது கவிதை

உன்னை தேடி தேடி
தென்றலும்
நானும்
ஓய்ந்தே
போய் விட்டோம் .......

ஊரில் உள்ள
எல்லோரையும்
பார்த்தாகிவிட்டது
உன்னை தவிர ...............

பூகடைகாரர்கள்
உன்னை நம்பிதானே
திருவிழாவிற்கு
கடை போட்டார்கள் ..........

யார் வந்தால் என்ன
நீ வந்தால் தானே
திருவிழா .......

உனக்காய்
காத்திருந்ததில்
ஒரே ஒரு
கவிதை தான் மிச்சம் .............
ஆனால்
அது
உன் அளவு இல்லைடி .............

எங்கே எனது கவிதை ............

Tuesday, February 2, 2010

நிலவே

உன்

காலடியில்

என்

வானம்............

காதல் திருவிழா

ஆயிரம் பேர்
கூடுகிற இடத்தில
இருவர் மட்டும்
தொலைந்து போனால்
அதுதான் காதல் ...............

யாருமே
இல்லாத இடத்தில
இருவர் மட்டும்
சந்திக்கிறபோது
ஊரே தொலைந்து போனால்
அதுதான் திருவிழா ...........

காதல்
திருவிழா ...

Monday, February 1, 2010

தேடலும் கிடைத்தலும்

உனக்காய்
தேடுகிறபோது
வார்த்தைகள்
தேடாமலே
கிடைகின்றன

Friday, January 29, 2010

வாழ்த்து

உள்ளத்திலிருந்து
உளறுகிறேன்
இத்திங்களிலிருந்து
உங்களுக்கு நான் அடிமை .......

வாழ்த்து

வாழ்த்தொன்று எழுதி வணங்கி வருவோரின்
கால்தொடவே கரைந்த துநெஞ்சம்

வாழ்த்தொன்று எழுதி வணங்கி வாழ்த்த வருவோரின்
கால்தொடவே துடிக்கிறது என் நெஞ்சம்

Saturday, January 2, 2010

பூவே

நீ காற்றாக மாறிய காரணம்

புரியாமல் தவிக்கிறேன்

நெஞ்சில் ஓர் ரணம் ...........

மாயங்கள் உலகில் இல்லையடி - நீ

மந்திரத்தின் மூத்த பிள்ளையடி

உன் கற்பனைக்கு முன்பு

கவிஞனும் தோற்று போவான்

உன் கால் கொலுசொலி கேட்டால்

கேட்டவன் கவிஞன் ஆவான் ............

உன் நெஞ்சில் என்ன மாயம்
சொல் நெஞ்சே
உன் கண்ணில் என்ன காயம்
சொல் கண்ணே
மௌன வார்த்தை
பூக்காதே
மனம் பேசும் வார்த்தை
கேட்காதே
சிரித்துபேசும் தென்றல் - நீ
சிரித்தால்
நின்று பார்த்து போகும்
கலைந்து போகும் மேகம் - நீ
பார்த்தால்
கூடி வந்து மழையாகும்............

கட்டி தழுவியபோது
கைகள் கவசம் ஆனதடி
கண்ணீர் துளிகள் பட்டு
தோள்கள் கரைந்து போனதடி .....
என் தோளும் மார்பும்
தோழமை பேசுமடி - நீ
தங்கி போன இதயத்தில்
தமிழ் வாசனை வீசுமடி ...........

Friday, January 1, 2010

கண்ணே ஏன் நீ கலங்குகிறாய்

கண்ணீர் கொண்டு ஏன் நீ முகம் கழுவுகிறாய்

யாரும் உன்னை தீண்ட வந்தால்

திரும்பி பாரடி நான் இருப்பேன் - உயிர்

தீரும் வரைக்கும் உன் நிழலாய் - நீ

திரும்பும் திசையில் நான் நடப்பேன்

காதல் பெண்ணே

கவிதை எழுதும் உன் கண்கள்

கண்ணீர் எழுத கூடாதடி - நீ

கண்ணீர் எழுத கண்டால்

காற்றும் நிலவும் தூங்காதடி.........

நீ ஓடோடி வந்ததை கண்டு

உயிர் கூத்தாடி போனதடி

மார்போடு முகம் புதைக்க

மனம் காத்தாடி ஆனதடி .....

வரம் கொடுக்கும் தேவதை உனக்கு

சாபம் கொடுத்தது யாரு

வாடிய பூவை கையில் எடுத்து

வாழ்கைய படித்து பாரு

நான் இருப்பேனே

உன்னை

என் தோள் சுமப்பேனே

நீ நடக்க

நீ சிரிக்க

அந்த அழகை

பார்த்து கிடப்பேனே

என் பொன் மானே ..............

பூவென பூக்கும் உன் விழியில்

கண்ணீர் காவியம் எழுதியதேன்

புன்னகை பூக்கும் உன் உதடு

எரிகிற தீயாய் உருகியதேன்...........

நிழலாய் உன்னுடன் நான் இருப்பேன்

நெஞ்சிலும் மார்பிலும் உன்னை சுமப்பேன்

உன் கண்ணில் நீர் கண்டால்

கைக்குட்டை ஆகிடுவேன் .........

இருட்டுக்குள் எதை நீ தேடுகிறாய்

இதயத்தில் எதையோ மூடுகிறாய்

நடந்ததை எல்லாம் மறந்து விட்டால்

நாளை நடப்பது சுகமாகும் ..............

உயிரே பூங்காற்றே

நிலவே பூங்கனவே - உன்

வாழ்வில் என்ன சோகம் - ஏன்

வாடி போனது தேகம் ..................

நான் என்ன உன்னை

விட்டு விட்டா போவேன்

விட்டு விட்டால் சாவேன்

என் வாழ்வே நீ வா .....................

கடலும் அலையும்

பிரியும் தேதி பிரிவோம் - அதுவரை

ஒன்றாக திரிவோம்

என் கனவே நீ வா .......

மாயம் கண்டு மயங்காதே

காயம் கண்டு மருகாதே

சோகம் உன்னை சேராமல்

பார்த்து கொள்வேன் கலங்காதே .........

நான் தானே

கண் திறந்து பாரடி ...

கண்ணீர் ஏனடி ....

நான் தானே

உன் எதிரில் இருப்பது.......

உன் நிழலாய் நடப்பது ........

நான் தானே

தோள்கள் எதற்காய் வாங்கி வந்தேன் - நீ

தோள்சாய தானே ....

மார்பை கூடாய் மாற்றி வைப்பேன் - நீ

குடியேறு மானே .......

இரவையும் நிலவையும் பிரித்து விட்டால்

கவிதையும் காதலும் இறந்து விடும்

இனிமையும் தனிமையும் விலகி நின்றால்

கண்களில் கண்ணீர் பிறந்து விடும் .........