Monday, June 14, 2010

இது புரியாத கவிதை அல்ல...புது கவிதை

அழகன்
பெற்றெடுத்த
ஒரு
அழகி ....

இல்லை
இல்லை

அழகி
பெற்றெடுத்த
ஒரு
பேரழகி ...

இங்கு
ஒரு
கேள்வி எழலாம்?

அழகியா
இல்லை
பேரழகியா ....

இளவழகன்
தூக்கி
கொஞ்சுகிறபோது
அழகி ...

இளவழகன் மனைவி
தூக்கி
கொஞ்சுகிறபோது
பேரழகி ...

ஒவ்வொரு
குழந்தையும்
ஒரு புத்தகம்
வரிக்கு வரி
வாசியுங்கள் ......

ஒவ்வொரு
குழந்தையும்
ஒரு வானம்
உங்கள்
சிறகுகளை
தேடி கண்டுபிடியுங்கள் .......

குழந்தையோடு
விளையாடுகிறபோது மட்டும்
யாருக்கும்
வியர்ப்பதில்லை
முடிந்தளவு விளையாடுங்கள் .....



உங்கள்
குழந்தை நிலவு
ரசித்து போன
நட்சத்திரங்களில்
நானும் ஒருவன் ....

ஒரு
குழந்தைக்கான கவிதை
வார்த்தைகளையும் தாண்டி
ஏதோ
ஒன்றில் தொடங்கி
ஏதோ
ஒன்றில் முடிகிறது ...

அது
எதுவாய்
வேண்டுமானாலும்
இருக்கலாம் ...

தெரிந்தால்
சொல்லுங்கள்
தெரியாமல் இருந்தால்
உங்கள் குழந்தை
உங்களுக்கு
சொல்லிக்கொடுக்கும் ...........

அன்புடன்
அசோக் .......

Sunday, June 13, 2010

காதல் கவியரங்கம்

எனக்கு
அன்னம் இட்டது
திரை அரங்கம்
ஆளாக்கி விட்டது
கவி அரங்கம்

எதை
பாடசொன்னாலும்
காதல் பாடுகிறவனை
காதலை
பாட சொன்னால் ?

எல்லோரும்
காதலிக்கிறார்கள்
ஆனால்
ஒரு சிலர் தான்
கவிதை எழுதுகிறார்கள்

முதல்
காதலும்
முதல்
கவிதையும்
ஒருவன்
தனக்கு தானே
எழுதிக்கொள்ளுகின்ற
கடிதங்கள்

நிறையபேர்
வாழ்கையில்
கடிதங்கள்
பிரிக்கபடாமலே
கிழிக்கப்படுகின்றன ............

காதல்
இசை
காது உள்ளவர்கள்
கேட்டு மகிழ்கிறார்கள் ....

காதல்
மொழி
வாய் இருப்பவர்கள்
பேசி சிரிக்கிறார்கள் ......

காதல்
இரவு
உன்னை எழுப்பிவிட்டு
அது
தூங்கி போய்விடும் ......

காதல்
நிலவு
கவிதைகளை
கடன் வாங்கும் .....

கல்லறை அதிசயமாய்
இருப்பதனால் தான்
என்னவோ
இங்கே தான்
காதலுக்கு அதிக
கல்லறைகள்
கட்டப்படுகின்றன ....

Saturday, June 5, 2010

***************

கொள்ளை
அடித்ததென்னவோ
அவள் தான்
ஆனால்
எல்லோரும்
என்னையே
விசாரிக்கிறார்கள் .........

பாட்டு

கவியெழுத நான் நினைத்தேன்
கண்ணே உன் பெயரெழுதி
கவிமுடித்தேன் அன்றே நான்
கவிஞன் ஆனேன் - என்
புவிமுழுக்க புகுந்த உன்எண்ணம்
புலன்அள்ளி தின்னுதடி பூவே
தவிக்கஎன்னை விட்டு விட்டு நீ
தள்ளியிருக்க காரணமென்ன

*************************

நிறைய
காதல்கள்
பேருந்தில்
ஆரம்பிக்கின்றன
ஆனால்
இறுதியில்
விபத்தில் முடிகின்றன ...
நிலவொளியில் மின்னுகிற
தூரத்து ஆற்றில்
இரவு குளிக்கபோனபோது
மின்னலாய் வந்த
உன் எண்ணங்கள்
என்னையும்
என் கவிதையையும்
எழுப்பி விட்டதடி .....

*****************************

மீண்டும்
பள்ளிக்கு
போகவேண்டும்
போலிருக்கிறது
இந்த முறை
நன் உன்னை
சுதந்திரமாய் காதலிக்கவேண்டும் ...........
காதலுக்கு
திருவிழா எடுத்தால்
நீயும் நானும்
தெய்வமவோம்
நம் கவிதைகள்
நமக்காய்
பல்லக்கு தூக்கி ஊர்வலம் போகும் ...
மரகிளையில்
கூடு கட்டுகிற
பறவைகள் கணக்காய்
மனகிளையில்
கூடுகட்ட விரும்பினேன் என எழுதி
அடுத்த வரி கவிதைக்காய்
அமர்ந்திருக்கிற பொழுது
நீ போட்ட கோலத்தில்
நானும் ஒரு புள்ளியானேன் .........

************************************

என்மேல்
ஒரு குற்றசாட்டு
எந்த
தலைப்பு கொடுத்தாலும்
உன்னை பற்றியே
எழுதுகிறேனாம் ....

அட
இது
என்ன
அநியாயம்

கவிதை போட்டியில்
கவிதை தானே
எழுத வேண்டும் .....

***************************************

வெள்ளிகிழமைதோறும்
கடவுள்
உனக்காய்
காத்து இருக்கிறார்
தினந்தோறும்
நான் சொன்னதை
உனக்கு திருப்பிசொல்ல