Saturday, May 22, 2010

தீராத பொழுதுகள் ...

என்
உலகம்
மைதான தேசத்தில்
மயங்கி கிடந்த பொழுது
கவிதை புத்தகத்தை
கையில் கொடுத்தவளே ....

திருவிழாக்களை
புறந்தள்ளிவிட்டு
திரைப்படத்தில்
தூங்கிகிடந்தவனை
ஒற்றை புன்னகையில்
எழுப்பி விட்டவளே .....

நீ
எங்கே
இருக்கிறாய்


வருடங்கள்
ஆறான பின்பும்
அப்படியே
கிடக்கிறது
உனக்காய்
எழுதிய கவிதைகளும்
வாங்கிய பொழுதுகளும் ....

நீயும்
நானும்
ஒரே பள்ளியில் படித்தோம்
கவிதை போட்டியில்
உன்
பெயர் எழுதி
நான்
மாட்டிகொள்ளுகிற வரை ....

அதற்க்கு பின்பு
பள்ளிகள்
இடம் மாறி போனது
இல்லை
வாழ்க்கையும் தான்....


ஒரே
ஊரில் இருந்தாலும்
உன்னை பார்பதென்பது
எட்டு திங்களுக்கு
ஒரு முறை தான்....


எப்பொழுதாவது
உன்னை
பார்த்தாலும்
கண்டும் காணாமலும்
போக சொன்னது
உன் மவுனம் ....

தொடர்ச்சியான
இடைவெளிகள்
தூரத்தை
நிர்ணயம்
செய்துவிட்டதால்
கவிதைக்கான
கற்பனைகள்
வாடி கிடக்கிறது .....

இதற்கு
நான்
காரணம் அல்ல
அவள் தான்..............

Wednesday, May 19, 2010

அகதி என்றால் அது வேறு யாருமில்லை அது தமிழன் தான்

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

கத்தி கத்தி
ஓய்ந்து போய்
அந்த கொடூரத்தை
காண சகிக்காமல்

கொத்தாய்
விழுந்த குண்டுகள்
ரத்தம் குடித்த
தொலைக்காட்சி பதிவுகளை

பள்ளிகுழந்தைகள்
பதுங்குகுழிக்குள்
புத்தகபையோடு
உயிரிழந்து கிடந்த
செய்தி தாள்களை

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

சொந்த மண்ணில்
சோற்றுக்கு அலைந்து
வழிதெரியாத காட்டில்
வாழ்க்கையை தொலைத்தபோது

கண்ணெதிரே சொந்தங்கள்
கற்பிழந்து
தெருமுற்றத்தில்
காகிதமாய் கழிந்தபோது

வெட்டவெளி சிறைசாலையில்
சொந்த நாட்டில்
அகதியெனும் சொல்
பிறந்த பொழுது

எல்லோரும்
மறந்து போனார்கள்
இல்லை
மரித்து போனார்கள்

Thursday, May 6, 2010

கவிதை போட்டியில் ஒரு கவிதை புத்தகம் ...............

நீ
எங்கே இருக்கிறாய்
என்
கவிதைகளின் பயணம்
வார்த்தைகளின்
பற்றாகுறையால்
பாதியிலே நிற்கிறது ...........


எந்த பேருந்தில்
ஏறினாலும்
உனக்கும்
ஒரு டிக்கெட்
சேர்த்தே எடுக்கிறேன் .....

மழையில்
நீ குடைபிடித்து
நடக்கிற அழகை பார்த்தால்
கவிதை
தன்னை தானே எழுதி கொள்ளும் .........

உன்
தெருவின் நீளத்தில்
என் காதல்
தன்
தேசத்தை தேர்ந்தெடுத்து கொண்டது .........


ஊருக்குள்
தெரு
ஆனால்
நீ
தெருவில் நடந்தால்
தெருவுக்குள் ஊர் ...............


ஓர கண்ணால்
நீ
பார்க்கிற அழகை பார்க்க
நிச்சயம்
இரண்டு கண் போதாது ............


நீ
எந்த போட்டியில்
கலந்து கொண்டாலும்
என்னை பொறுத்தவரை
அது கவிதை போட்டி தான்........

Wednesday, May 5, 2010

நினைவில் தொலையாத ஒரு கனவு

இரவல்
வாங்கிய
எந்த கவிதை
புத்தகத்திலும்
உன்னை போல் ஒரு கவிதை இல்லை...