Saturday, December 5, 2009

இது தேவதை கதை அல்ல கவிதை

உன்னை
தேரடி வீதியில் தான்
முதல் முதலில்
பார்த்தேன் ....
அன்று முதல்
அது எனக்கு
தேவதை வீதி....

உண்மையிலே நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமா .........

ஊருக்குள்
தெரு.....
ஆனால் நீ
தெருவில் நடந்தால்
தெருவுக்குள்
ஊர்.....

Wednesday, December 2, 2009

அன்பே நீ ....

கம்பன்
பாரதி
ஷெல்லி
மில்டன்
எல்லோரும்
கவிதை ஆனார்கள் ...
உன்
பெயர் இடபட்ட
என்
கவிதை புத்தகத்தில் .....

மை மழையாகிறது

மின்னல் எடுத்த
புகை படத்தில்
கடவுள்
கண்டபடி
கையெழுத்து போடுகிறார். .........

Friday, November 27, 2009

மா வீரர் கதை படிப்போம்

இந்த மா வீரர் நாளில்
நாம் மா வீரர் கதையை படிப்போம் ...

அடுத்த மா வீரர் நாளில்
அந்த___________கதையை முடிப்போம் .....

காலம் வரும்
அதுவரை நாம் பொறுத்திடுவோம் .........

ஈழம் வரும்
ஈழ மண்ணில் சேர்ந்து சிரித்திடுவோம்

வாழ்க தமிழ்..
வளர்க தமிழ் உள்ளம்.




Wednesday, November 25, 2009

நடத்துங்கள் நடத்துங்கள் இது உங்கள் நாடு

காதலர்கள் வந்தார்கள்
காதலித்தார்கள்
தங்கள் ஆடைகளை
சரி செய்து கொண்டார்கள் ....

தாசிகள் வந்தார்கள்
தவம் இருந்தார்கள்
வரம் கொடுக்க
வாலிபர்கள் கூட்டம் ...........

காவல் துறை வந்தது
கட்டு பாடு என்றது
மந்திரி மகன் என்றதும்
மவுனமாய் சென்றது .......

பொது மக்கள் வந்தார்கள்
சீ என்றார்கள்
சினிமாவை திட்டிவிட்டு
சீக்கிரம் வீடு போய் சேர்ந்தார்கள் .....

ஒன்று மட்டும் சொல்கிறேன்
அன்று
மெரினா கடல்
இன்று மெத்தை..................

Thursday, October 22, 2009

இந்த ஈரம் எப்போது காயும்

ஈழம்
ஈரமாகவே
இருக்கிறது
இங்கு
யார் நெஞ்சிலும்
ஈரம் இல்லாததால்...

இந்த ஈரம்
கண்ணீரும்
ரத்தமும்
கலந்த ஈரம்....

ஒரு காலத்தில்
அங்கு
ராஜாவை
வலம் வந்தோம் ...
இன்று
மூல்வேலிக்கு உள்ளே
முகவரி இன்றீ கிடக்கிறோம் ........

Thursday, October 15, 2009

என் தமிழும் என் கவிதையும்

அவசரமாய் போன ஒரு யுகத்தில் நானும் அவசரத்தில் எழுதுகின்ற இந்த கவிதையை நீங்கள் பொறுமையாய் படிக்கிற பொழுதுதான் என்னுடைய கவிதை கவிதையாகிறது ....................

தான் எழுதிய கவிதைகளை
நினைவில் வைத்து கொள்கிறவன்
கவிஞன்...
மறந்து விடுகிறவன்
மகா கவிஞன்..
நான் மகா கவிஞன்......

என்னுடைய இந்த வலைதளம் என்னுடைய சமூகத்தை நான் பார்த்த மட்டில் எனக்கான புரிதலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கிடைத்த ஒரு வாய்பாக எண்ணி என் படைப்புகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்..கடந்த ஆறு ஆண்டுகளை நான் ரசித்த கவிதைகளையும் நான் ரசித்து எழுதிய கவிதைகளையும் எழுத உள்ளேன். கரிசல் மேடு மழையை கண்டால் குளித்து கொண்டே தலை துவட்டி கொள்ளுமே ..அது போல் நானும் நீங்கள் எனை வாசிக்க வாசிக்க வளம் பெறுவேன்...

அன்புடன்
அசோக்...