Friday, April 30, 2010

முத்தங்களை கன்னங்களே தீர்மானிகின்றன

நீ
கொடுத்த
முத்தத்தின் ஈரம்
காய்வதற்குள்
இன்னுமொரு முத்தம் கொடு ....

உன்
முத்தங்களின் வாசம்
கன்னத்தில்
ஆரம்பித்து
கவிதையில்
முடிகிறது...............

உன்
முத்தத்தின் நீளத்தில்
உதடுகள்
தொலைந்து
போகின்றன ...........

நீ
ஆயிரம் முத்தம்
கொடுத்திருக்கலாம்
ஆனால் அந்த
முதல் முத்தத்தின் வாசம்
இன்னும்
உயிரோடு இருக்கிறது
உதடோரம் ............


முத்தங்கள்
பரிசுகள்
தயவு செய்து
யாரிடமும்
கேட்டு வாங்காதீர்கள் ...........

முத்தங்கள்
ரகசியங்கள்
உதட்டோடு
உதடு
பரிமாறி கொள்ளுங்கள் ........

கண்ணை
மூடிக்கொண்டு
படிக்ககூடிய
ஒரே கவிதை
முத்தம் ........






Tuesday, April 6, 2010

அழகான யோசனை .............

ரோஜாவிற்கு
பெயர் மாற்றம் செய்தால்
உன் பெயர் வைக்கலாம் ..........

நீ வந்த பிறகு ..........

நீ வந்த பிறகு
என்
வானம்
இன்னும் அழகானது
உன் லிப்ஸ்டிக் பூசி கொண்டு ......

நீ வந்த பிறகு
எல்லாம்
தலைகீழ் ஆனது
நானும் கவிதை எழுதுகிறேன் ........

நீ வந்த பிறகு
கொஞ்சமாய் பேசுகிறேன்
ஆனால்
நிறைய சிரிக்க வேண்டி இருக்கிறது .......

நீ வந்த பிறகு
எதிர்த்தே பேசுவதில்லை
ஏனோ யார் பேசுவதும்
என் காதில் விழவேயில்லை ........

நீ வந்த பிறகு
எதையுமே மறப்பதில்லை
உன்னை தவிர
வேறு எதையும்
நினைத்தால் தானே மறப்பதற்கு ........

எங்கே எனது புது கவிதை

உன்னை தேடி தேடி
தென்றலும்
நானும்
ஓய்ந்தே
போய் விட்டோம் .......

ஊரில் உள்ள
எல்லோரையும்
பார்த்தாகிவிட்டது
உன்னை தவிர ...............

பூகடைகாரர்கள்
உன்னை நம்பிதானே
திருவிழாவிற்கு
கடை போட்டார்கள் ..........

யார் வந்தால் என்ன
நீ வந்தால் தானே
திருவிழா .......

உனக்காய்
காத்திருந்ததில்
ஒரே ஒரு
கவிதை தான் மிச்சம் .............
ஆனால்
அது
உன் அளவு இல்லைடி .............

எங்கே எனது கவிதை ............