Monday, November 29, 2010

ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் கவிதைகள்

கவியெழுத  ஆரம்பித்த
காலம் தொட்டு
காத்திருந்து எழுதியதில்லை
கவிதை பாட்டு......

காலமெல்லாம் நிற்கும்படி
சீர்களைப் போட்டு
கவியெழுதப் போகின்றேன்
உங்கள் கால்கள் தொட்டு ......

வாக்கொன்று கொடுத்ததனால்
வார்த்தையிங்கு தொடுக்கவில்லை
வாழ்த்தொன்று வாங்குவதற்கு
வாய்ப்பன்று கொடுக்கவில்லை .....

ஆசைக்கு நாள்குறிச்சு
அன்னைக்கு சேர்ந்தகத
மீசை நரைச்ச பின்னும்
மிச்சகத பேசுதுங்க ........

இருபதிலே மணமுடிக்க வாய்ப்பு
இல்லை பலருக்கு
அறுபதிலே மணமுடிக்க நூறில்
ஆறுபேருக்கு வாய்க்குமோ?

பெத்தபுள்ள  தூக்கி
பேருவச்ச காலம்போயி
பேரப்புள்ள தூக்கி
பேருகேட்கும் நாள் வந்ததே!

ஓடி உழைச்சதில
உடம்பு தேஞ்சிருந்தாலும்
உறவுகள பாத்தவுடன்
உசிரு துடிக்கிறதே .....

இத்தன வருசத்தில்
எத்தன ரகசியங்கள்
கண்ணால பேசிகிட்டு
கரைஞ்சு  போயிருக்கும் ...

நாளெல்லாம் சொன்னாலும்
நாள் குறிச்சு  சொன்னாலும்
நலுங்கு வச்ச நாள
மறக்க மனசுல இடமேது .....

இருமனமே இருமணம் தானென்று
இருந்துவிடப் போகின்றீர்
மூன்றுமகன் இருப்பதனால்
முப்பெரும் விழா இருக்கின்றது .....








 

2 comments:

  1. அருமையான கவிதை !......
    என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு ........

    ReplyDelete
    Replies
    1. Thank you for the complement and wish u the same.

      Delete